சொல்லாத நாளில்லை


சொல்லாத நாளில்லை சுடர் மிகு வடிவேலா!!
சுவையான அமுதே செந்தமிழாலே!!- உன்னைச் சொல்லாத
கல்லாத எளியோரின் உள்ளமெனும் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான போதும் - உன்னைச் சொல்லாத
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்விலே
இணையிலா நின் திருபுகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் ஆட..
அரகர சிவகுக மால்மருகா என
அனுதினம் ஒரு தரமாகினும்- சொல்லாத நாளில்லை


2 comments:

ஆயில்யன் said...

காலை வேளைகளில் அடிக்கடி கேட்டிருந்தாலும், அயலகம் வந்தபின் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்!
நன்றி யோகன் அய்யா :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆயில்யன்!
ஆம் காலைநேரத்துக்கு மிக உகந்த பாட்டே!!
இன்றும் கேட்கலாம்.