ஏறுமயில் ஏறிவிளையாடு முகம்!



நல்லூர் திருவிழாக்காலம், அப்பன் முருகனை நினைக்கவும்; அத்துடன் அன்றைய கச்சேரிகளில் இறுதிப்பாடலாக அமையும் திருப்புகழை நினைத்தும்.

இன்று தில்லானா இந்தத் திருப்புகழைத் துரத்தி விட்டது.

எனினும் சிலர் இன்றும் பாடுகிறார்கள்.

இது மதுரை சேஷ கோபாலன் அவர்கள் கச்சேரியில் இருந்து....

நின்னைச் சரணடைந்தேன்.....கண்ணம்மா


நான் ரசித்த பாடல்களை உங்களுடன் பகிரவே இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளேன்.அப்பப்போ இதில் நான் ரசித்த பாடல், இசை ஒலிக்கும்....

இதை நிறுவ எனக்கு அயராது உதவி செய்த சக வலைப்பதிவர் "வினையூக்கி"...செல்வகுமாருக்கு என் இதய பூர்வமான நன்றி!

சென்னை பதிவர் பட்டறையின் பின்; உதவி கேட்டால் செய்யமுடியுமெனக் கூறிப் பதிவிட்ட போது ; நான்
உங்களுக்கு ஒரு நல்ல மாணவன் கிடைத்துள்ளான். எனக்கூறி... இந்த பாடல் சேர்க்கும் விதம் பற்றிக் கேட்டபோது சளைக்காமல் என் கேள்விகளுக்கு பதில் தந்து ஆக்கபூர்வமான ஆலோசனையும் தந்ததால்
இன்று இந்தப் பதிவை என்னால் இட முடிகிறது.

என் பதிவுலகம் பின்னூட்டத்துடன் இருந்த போது , கூடல் குமரன் வாருங்கள் எனக் கூப்பிட்டு என் முதல் கட்டுரையைத் தன் தளத்தில் இட்டார்.; குறிஞ்சி மலைநாடர்...குடிலமைத்து வெளிக்கொணர்ந்தார். ஊரோடி பகீ பீற்றாப் பிரச்சனையில் இருந்து மீட்டார். சாரல் சயந்தன் என் குடிலுக்குப் புது அலங்காரம் செய்தார். இப்போ வினையூக்கி செல்வகுமார் பாடல் ஒலிக்க வைத்துள்ளார்....

உங்கள் அனைவர் உதவும் மனதுக்கு; தலை சாய்க்கிறேன்.

தொடர்ந்தும் தேவைக்குதவுவீர்கள். என நம்புகிறேன்.


இத்தளத்தில் முதற் பாடலாக மகாகவி பாரதியாரின் ;இன்றைய இளம் பாடகிகளில் என் உள்ளம் கவர்ந்த பம்பாய் ஜெயஸ்ரீ அவர்கள் குரலில் வந்த பாடல்..
மூலப்பாடலில் 4 வரிகள் பாத்திரம்; இசையுருக் கொடுத்துள்ளார்கள்; மிக உருக்கமாகப் பாடியுள்ளார்.
என்னை வெகுவாகக் கவர்ந்தது.
இப்பாடலைக் கேட்ட....




நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னை)

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னை)

துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்ப்பில்லை
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட (நின்னை)

நல்லது தீயது நாமறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்னை)


ஆயிரம் தாமரை மொட்டுக்களே.....

இப்பாடல்.. வந்த காலத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்று இளையராஜாவுக்கு புகழ் சேர்த்தது.

பாரதிராஜா+இளையராஜா+வைரமுத்து கூட்டில் உதித்த முத்து.

எனக்கு என்றும் கேட்கப் பிடித்தது.

உங்களுக்கு!!!