தைய தையா....
இந்தத் 'திருட்டுப் பயலே' படத்தில் இடம் பெற்ற , பாடல் எனக்கு மிகப் பிடித்தது.

சாதனா சர்க்கம் குரல் இனிமையாக உள்ளது. சிறிய உச்சரிப்புத் தவறுகளைக் கூட இவ்வினிய குரலுக்காக மறக்கலாம். நமது
தொலைக்காட்சி அறிவிப்பாளினிகளிலும் ஆயிரம் மடங்கு சிறப்பு.

அடக்கமான ஈர்க்கும் பரத்வாசின் ,சொற்களைக் கொல்லாத இசை.

வயலின், புல்லாங்குழல், தவில்.. அத்துடன் அருமையான இந்துஸ்தானி ஆலாபனை

இப்பாடலை யாத்தவர் யாரெனத் தெரியவில்லை. மிக அருமையான வரிகள்..
கேட்ட நாள் முதல் இந்தப் பாடல் பிடித்தது.