பருவம் பார்த்து.......Paruvam Parthu Arugil

அன்றும் இன்றும் கேட்கத் தெவிட்டாத இனிய கீதம்.

படம்: மருத நாட்டு இளவரசன் ----- இசை: S.V.வெங்கட்ராமன்

பா டல் : கண்ண தாசன் ----- குரல்: T.M. சௌந்தரராஜன்

நடிப்பு: சிவாஜி கணேசன்,ஜமுனா

பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?
பழக வந்த அழகன் மீது கொண்ட கோவமா?
வருவார் வருவார் என்று வாசலில் நின்றாயோ?
வாடை என்னும் காற்று வந்து வதைத்திடக்
கண்டாயோ? சென்றாயோ?
ஞாயிறு பெற்றவள் நீ தானோ?
திங்கள் என்பதுன் பெயர் தானோ?
நலம் பாடும் செவ்வாயில் தமிழ் பாடும் நகை கொண்டு
நடமாடும் தனி வைரச் சிலையோ?
மேகம் வலைவீசி மணம் கொண்ட துணையோ?
காலிலே சதங்கை கலீர் கலீரென
கண்களிலே மின்னல் பளீர் பளீரென
கைகள் வீசி வரும் கன்னி போல
எழில் காட்டியும் அமுதம் ஊட்டியும்
என்னை வாட்டி வதைப்பதென்று
வடிவமான கலைவண்ணமே! இயற்கை அன்னமே!!2 comments:

பிரேம்ஜி said...

ஆஹா.. அருமையான பாடல் இது. மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரேம்ஜி!
சந்தர்ப்ப வசமாகப் பார்த்த போது; இனிமையும் ஆழமும் பகிரவேண்டும் போல் இருந்தது.