சாந்துப் பொட்டு.....சந்தனப் பொட்டு...



திரைப்படம் : சிவகெங்கைச் சீமை
இயற்றியவர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி
குரல் : பி.லீலா


சாந்துப் பொட்டு தள தளக்க!
சந்தனப் பொட்டு கம கமக்க!
மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது பாண்டியர் பாருங்கடி...

பத்தினி பெண்மையைக் காப்பவராம்!
பாவலர் வறுமை தீர்ப்பவராம்!
சுத்த வீரர் எங்கள் மருது பாண்டியர்!
ஜெயக்கொடி பறப்பதைப் பாருங்கடி!

யானையைப் பிடித்து அடக்கியவர்!
ஆறடி வேங்கையை மடக்கியவர்!
வானமறவர் எங்கள் மருது பாண்டியர்!
வாழும் நகரம் இங்கு பாருங்கடி!

பார்வையில் எதிரிகள் பயப்படுவார்!
பாவையர் யாவரும் வசப்படுவார்!
காவியம் புகழும் மருது பாண்டியர்!
வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துங்கடி!!

கவியரசர் கண்ணதாசனின் பொருள் பொதிந்த சொற்களுக்கு
விஸ்வநாதன் -ராமமூர்த்தி வெகு சிறப்பாக இசைதொடுத்த
பாடல் , இளமைமுதல் ரசித்தேன்.
அழகான நடனம்...தெவிட்டாதது...
இன்றைய பாடற் காட்சிகள் பெருமூச்சை வரவைத்தன...

6 comments:

கோவி.கண்ணன் said...

//சாந்துப் பொட்டு.....சந்தணப் பொட்டு... //

யோகன் ஐயா,

சந்த'ன'ம் - இரண்டு சுழி 'ன' தான் வரும்.

நானும் பிழையாகத்தான் எழுதுவேன், நான் எழுதும் போது எனக்கு தெரியாது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கோவி கண்ணன்!
தலைப்பிடுமுன் கூகிளாரிடம் சென்று பார்த்தபோது, சீர்காழியார் பாடல்
கௌமாரம் தளத்தில் 'சந்தணம் மணக்கும் செந்தமிழ்க்குமரன்' எனும் பாடலுடன் பல 'சந்தணங்கள்' கிடைத்தது.
சரி சந்தனம் பார்ப்போம் என்றால்,' அரைச்ச சந்தனம்' வகையறாக்கள்
கிடைத்தன.
எனினும் சீர்காழியாரின் தெளிவான உச்சரிப்பை வைத்தும்,என் காதில் இந்தப் பாட்டு விழுந்ததையும், சொல்லிப் பார்த்தபோது 'ண', 'ன' விலும் பொருத்தமாக ஒலிப்பது போலும் இருந்ததால் இட்டேன்.
எனினும் இதைச் கவனத்தில் கொள்கிறேன். வேறு அகராதியில் கட்டாயம் பார்த்துச் சொல்லவும்.
நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

அருமையான பாடல் தானே யோகன்?
நான் அறிந்தவரையில் சந்தனம் என்பதுதான் சரி என நினைக்கிறேன். விக்கிபீடியாவிலும் சந்தனம் என்றுதான் உள்ளது.

சின்னப் பையன் said...

ஓ!!! நான் கமல் பாட்டுன்னு நெனெச்சித்தானே வந்தேன்!!!...:-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நிர்ஷன்!
சந்தனமாக்கி விட்டேன்.
இந்தப் பாடல் இசைத்தமிழுக்கு செழுமை சேர்ப்பது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ச்சின்னப் பையன்!
என் சிந்தை கவர்ந்த சில கமல் பாடல்கள் உள்ளது ;உங்களுக்காக. கட்டாயம் விரைவில் இடுகிறேன்.
இளைய தலைமுறை இதன் இனிமையையும்,அழகையும் அறிய வேன்டுமென்பதே என் அவா!