ஒரு மல்லிகை மொட்டு.......

ஒரு....



மல்லிகை......


மொட்டு........



வெய்யில்......


துளி...பட்டு....


சில்லெனப்...



பூத்தது... இதழ் விரித்து...





இந்த மல்லிகையின் பாட்டி ,ஈழத்தில் திருகோணமலையில் உள்ளார். இவள் தாயாரோ,ஈழத்தில் பிறந்து லண்டனில் உள்ளாள்.


இவளோ சென்ற சித்திரை பதியத்தில் லண்டனில் பிறந்தவள், இவளை பாரிசில் எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்த்து...


இன்று இவள் பூத்திருப்பதை ஆசையோடு உங்களுடன் பகிர்கிறேன்.




இப்பாடல் ரங்க ராட்டினம் படத்தில் எஸ்.பி.பாலா பாடியது.


சங்கர் கணேசின் இசையில் வந்த நல்ல பாடல்...


**** சரியான சூரிய ஒளி கிட்டும் வரை ,பூக்கச் சிரமப்பட்டது. இப்போ நல்ல


இடத்தில் வைத்துள்ளோம்.




4 comments:

தாசன் said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

தீபாவளி நல் வாழ்த்துகள் யோகன்.
மல்லிகை மொட்டு என்று தலைப்பை பார்த்ததும் வந்துவிட்டேன்.
அந்தப் பாட்டு அவ்வளவு பிட்க்கு,
வந்தால் இங்கே நிஜமாகவே மலிகை பூத்துக் கொண்டிருக்கிறது.....
மிக நன்றி யோகன்..
படத்திற்கும் பாடலுக்கும்.

M.Rishan Shareef said...

அன்பின் யோகன்,
மணக்கும் படங்களுடனான இந்தப் பதிவு எனது வீட்டு மல்லிச் செடியை நினைவுபடுத்துகிறது.
வீட்டில் கொடி மல்லிகை இருக்கிறது.கொடியின் கீழ் பூக்கள் நிறைந்து சொறிந்திருக்கும்.இரவில் மொட்டவிழும் போது வாசனை கும்மென்று ஆளைத் தூக்கும் அல்லவா?
வீட்டில் பூக்களைப் பறிக்க அனுமதியில்லை.ஆனால் கண்வருத்தத்திற்குக் கழுவ யாராவது கேட்டால் பறித்துக் கொடுப்போம்.
பரிசுத்தமான மலர்களைக் கொண்ட பதிவினைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தாசன் ;வல்லி அக்கா வருகைக்கு நன்றி!
ரிஷான்!
எங்கள் வீடுகளிலும் மல்லிகைப் பந்தல் இருந்தது.மாலை நேரம் நட்சத்திரம் நிலத்தில் கொட்டியது போல்
விழுந்து கிடக்கும்; தூக்கலான மணம். மறக்கக் கூடியதல்ல.
வீட்டில் கோவில் ,மங்கள காரியங்களுக்குப் போகும் போது மாலைகோர்த்துக் கொண்டையில் சூடுவார்கள்.
பூசை அறைச் சாமி படங்களுக்கும் செவ்வாய்;வெள்ளியில் வைப்போம்.
இங்கே பிரான்சின் தென் பகுதியில் ஏக்கர் கணக்கில் இதை செடிஅளவில் வளர்த்து; இப்பூவின் சாரம் எடுத்து , வாசனைத் திரவியங்களுக்கு இடுகிறார்கள்.
கண்வருத்தத்திற்குப் பாவிப்பதென்பது எனக்குப் புதிய செய்தி.
நாம் நந்தியாவட்டைப் பூ வையே ,இளநீரில் இட்டுக் கண்வருத்தத்திற்குப் பாவிப்போம்.